சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா – நிகழ்ச்சி விவரம்!

Published:

sankarankovil adithapasu - 2026

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி சமேத ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடி தபசு திருவிழா நிகழ்ச்சி விபரங்கள் 2018…

கொடியேற்றம்: 17.07.2018 ஆடி 01 செவ்வாய் கிழமை காலை 08:15 மணிக்கு மேல் 08:35 மணிக்குள் கொடியேற்றம்…

ஒன்றாம் திருநாள்: 17.07.2018 இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை தங்க சப்பரத்தில் வீதியுலா…

இரண்டாம் திருநாள்: ஆடி 02 புதன்கிழமை 18.07.2018…
காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்க தரிசனம்/அலங்காரம் வீதியுலா….

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதியுலா…

மூன்றாம் நாள்: ஆடி 03 வியாழக்கிழமை 19.07.2018…
காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்கம் அபிஷேகம்/அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா…

நான்காம் திருநாள்: ஆடி 04 வெள்ளி கிழமை 20.07.2018…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை சிவலிங்க பூஜை அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா…

ஜந்தாம் திருநாள்: ஆடி 05 சனிக்கிழமை 21.07.2018…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை தமிழ் மறை ஓதுதல் அலங்காரம் வீதியுலா…

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி சப்பரத்தில் வீதியுலா…

ஆறாம் திருநாள்: ஆடி 06 ஞாயிற்றுக்கிழமை 22.07.2018…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை யோகாசனம் ஆத்மார்த்த பூஜை அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை கனக தண்டிகையில் வீதியுலா…

ஏழாம் திருநாள்: ஆடி 07 திங்கள் கிழமை…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை கோ சம்ரஷனை அலங்காரம் வீதியுலா….

முற்பகல் 12.00 மணிக்கு ஸ்ரீ வன்மீக நாதர் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை பூம்பல்லக்கில் வீதியுலா…

எட்டாம் திருநாள்: ஆடி 08 செவ்வாய் கிழமை 24.07.2018…

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வீணாகானம் செய்தல் அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதியுலா…

ஒன்பதாம் திருநாள்: ஆடி 09 புதன்கிழமை 25.07.2018…

காலை 05:00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை ரதத்திற்கு எழுந்தருளல்

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை திருத்தேரோட்டம்…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி காம தேனு வாகனத்தில் வீதியுலா…

பத்தாம் திருநாள்: ஆடி 10 வியாழக்கிழமை 26.07.2018….

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

காலை 09:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை முளைப்பாரி எடுத்தல் அலங்காரம் வீதியுலா…

இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா…

பதினொன்றாம் திருநாள்: ஆடி 11 வெள்ளி கிழமை 27.07.2018…

காலை 05:00 மணிக்கு மூலஸ்தானம் ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி ஸ்ரீ கோமதி அம்பிகை கும்பம் அபிஷேகம் திருக்கண் தபசு மண்டபத்தில் பானகம் சிறுபருப்பு நைவேத்தியம் விளா பூஜையில் மூலஸ்தானம்…

காலை 08:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம்…

காலை 09:00 மணிக்கு ஸ்ரீ சங்கர நாராயண ஸ்வாமி மண்டகப்படி அழைப்பு சுருள், இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும்,மூலஸ்தானம் ஸ்ரீ ஸ்வாமி அம்பாளுக்கும், ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரருக்கும் கும்பம் அபிஷேகம்/அலங்காரம்…

பிற்பகல் 12:05 மணிக்கு தங்க சப்பரத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகை தபசு மண்டபத்திற்க்கு எழுந்தருளல்…

மாலை 02:45 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி தபசு காட்சிக்கு திருக்கோவிலில் இருந்து புறப்பாடு…

மாலை 05:00 மணிக்கு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு தபசு காட்சி கொடுத்தல்…

இரவு 08:00 மணிக்கு ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி யானை வாகனத்தில் திருக்கோவிலில் இருந்து புறப்பாடு…

இரவு 09:00 மணிக்கு ஸ்ரீ சங்கர லிங்கம் ஸ்வாமி யானை வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு காட்சி கொடுத்தல்…

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

பன்னிரெண்டாம் திருநாள்: ஆடி 12 சனிக்கிழமை 28.07.2018…

பகல் 12:00 மணிக்கு உச்சி காலத்தில் மூலஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கம் ஸ்வாமி, ஸ்ரீ கோமதி அம்பிகைக்கு அபிஷேகம்…

இரவு 10:00 மணிக்கு ஸ்வாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா…

முக்கிய தகவல்:

இந்தாண்டு 27.07.2018 வெள்ளி கிழமை நள்ளிரவு 12:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 03:50 மணி வரை சந்திர கிரஹணம் நடைபெற உள்ளதால் ஆடி தபசு காட்சி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது….

மாலை 06:00 மணி காட்சி இந்தாண்டு மாலை 05:00 மணிக்கு நடைபெறும்…

இரவு 12:00 மணி காட்சி இந்தாண்டு இரவு 09:00 மணிக்கு நடைபெறும்…

(ஆடி தபசு திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 27.07.2018 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…)

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img