தீபாவளியில் மத்தாப்பாவது கட்டாயம் கொளுத்த வேண்டும்… ஏன் தெரியுமா? சாஸ்திரம் சொல்வது என்ன?

diwali mathappu - 2026

தீபாவளிக்கு பட்டாசு போட இயலாவிட்டாலும், மத்தாப்பாவது கையில் பிடித்துக் கொளுத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம். சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.  மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.

“ஸ்மிருதி கௌஸ்” என்ற ஸ்தோத்திரத்தில் இதுபற்றி…
“துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்”
என்ற ஸ்லோகம் வாயிலாக இந்தக் கருத்து சொல்லப் படுகிறது.

“துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, “உல்கா’ எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் “பூத’ என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி.

‘தர்சம்’ என்ற வார்த்தை “அமாவாசை’யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை. இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம். காரணம் என்ன? “பித்ரூணாம்” என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள். இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக “ப்ரதோஷ-காலத்தில் “உல்காதானம்” செய்வோம்.

उल्का-हस्ता-नराःकुर्युः-पितृणां-मार्गदर्शनम्।। -“अग्नि-दग्धाश्च-ये-जीवाः-येप्यदग्धाः-कुले-मम । उज्ज्वल-ज्योतिषा-दग्धाः-ते-यान्तु-परमां-गतिम् । यमलोकं-परित्यज्य-आगता-ये-महालये । उज्ज्वल-ज्योतिषा-वर्त्म-प्रपश्यन्तु-व्रजन्तु-ते ||
உல்கா=நெருப்புடன்-கூடிய-கடடை; (=மத்தாப்பு)

மேலும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,
“நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா”
– என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

– ராஜசேகர வாத்தியார், திருநெல்வேலி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories