அட்சய திருதியை; 27 நட்சத்திரக்காரர்களும் இந்த தானங்களைச் செய்யலாமே!

Published:

atchaya thrithiyai2 - 2026

அட்சய திரிதியை நாள் என்பது, தான தர்மங்கள் செய்து, தர்மம் வளர்க்க வேண்டிய நாள். எனவே 27 நட்சத்திரங்களில், அவரவர் பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டவர்கள், இந்த தானங்களைச் செய்தால், வாழ்வில் நன்மை பெருகும்.

1.அஸ்வினி – கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.

2.பரணி – நெய்தானம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

3.கிருத்திகை – சர்க்கரை பொங்கல் தானம். பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.

  1. ரோகிணி – பால் அல்லது பால் பாயாசம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

5.மிருக சீரிஷம் – சாம்பார் சாதம் தானம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.

  1. திருவாதிரை – தயிர் சாதம் தானம். ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.

7.புனர்பூசம் – தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

  1. பூசம் – மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.

  2. ஆயில்யம் – வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.

  3. மகம் – கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.

  4. பூரம் – நெய் சாதம் தானம். மனநோயாளிகளுக்கு உதவலாம்.

  5. உத்திரம் – சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.

  6. அஸ்தம் – பால் பாயாசம் தானம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.

  7. சித்திரை – துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.

  8. சுவாதி – உளுந்து வடை தானம்.வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கிக் கொடுக்கலாம்.

  9. விசாகம் – தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

  10. அனுசம் – மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.

  11. கேட்டை – வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.

  12. மூலம் – கதம்ப சாதம் தானம். ஏழைகளுக்கு உதவலாம்.

  13. பூராடம் – நெய் சாதம் தானம். ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.

  14. உத்திராடம் – சர்க்கரை பொங்கல் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

  15. திருவோணம் – சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல்தானம் செய்யலாம்.

  16. அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.

  17. சதயம் – உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.

  18. பூரட்டாதி -தயிர் சாதம் தானம்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

26.உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.

27.ரேவதி -வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.

 

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img