40 வருடங்களுக்குப் பின்… வெளிவரும் அத்தி வரதரை தரிசிக்க… தயாராகிறது காஞ்சி!

Published:

kanchipuram temple - 2026

காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் அத்தி வரதர் திருவிழாவை ஒட்டி கோவிலில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு நீர் வெளியேற்றும் ஆயத்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில் குளத்தின் அடியில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளஅத்தி மரத்தால் ஆன அத்திவரதர் வரும் ஜூலை ஒன்றாம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்களின் பார்வைக்காக காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் வைக்கப்படுவார்

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோர் கோவில் குளத்தில் உள்ள நீரை அகற்றுவதற்கான பணிகளை உயர் மின்விசை மோட்டார் மூலம் கோவில் குளத்தில் இருந்து அதே கோவிலில் உள்ள மற்றொரு குளத்திற்கு நீரை வெளியேற்றுகின்றனர்

இந்த பணியானது 15 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அத்திவரதர் வரும் ஜூலை ஒன்றாம் தேதியன்று குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்

அதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் தற்போது தொடங்கியுள்ளனர்.

அத்திவரதர் திருவிழாவை ஒட்டி தற்காலிக பேருந்து நிலையம், சுகாதாரம், போக்குவரத்து, தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது

Related articles

Recent articles

spot_img