“ஆச்சரியமும் பேராச்சரியமும்”

“ஆச்சரியமும் பேராச்சரியமும்”

(“தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம் தரணும்’னு பக்தர் சொன்னதை ,பக்கத்துல இருந்து கேட்டவர் மாதிரி ,தானே நினைவுபடுத்தி வாங்கிண்டது பேராச்சரியம்.)

நன்றி- குமுதம்.லைஃப்
தொகுப்பு-பவானி ஸ்ரீதர். 62008736 1282271998596245 8229968203191681024 n - 2026
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு சமயம் மகாபெரியவா தஞ்சாவூர்ல முகாமிட்டிருந்தார். வழக்கம்போல ஆசார்யாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கறுதுக்காக , சுத்துவட்டாரத்துல இருந்தெல்லாம் தெனமும் நெறைய பக்தர்கள் வந்துண்டு இருந்தா.

அங்கே தஞ்சாவூர்ல, பங்காரு காமாட்சியம்மனுக்குஒரு கோயில் உண்டு.அந்தக் கோயிலோட ட்ரஸ்டி. நடராஜ சாஸ்திரிகள் மகாபெரியவாளோட பக்தர். ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல மகாபெரியவாளுக்கு பன்னீர் ரோஜா மாலை வாங்கி சமர்ப்பிக்கணும்னு அவருக்குத் தோணியிருக்கு.

இப்போ மகாபெரியவாளே தஞ்சாவூருக்கு வந்திருக்கறதால தன்னோட எண்ணத்தை ஈடேற்றிக்கலாம்னு நினைச்சார். அதனால, ஒருகடையில்,புது ரோஜாப்பூவுல தொடுத்த மாலை ஒண்ணு மறுநாள் வேணும்னு ஆர்டர் குடுத்தார்.

மறுநாள் காலங்கார்த்தால பூக்கடைக்குப் போனார். ‘தேன்மணம் மாறாத ரோஜா மாலையை வாங்கிண்டு போய் பெரியவாகிட்டே சமர்ப்பிக்கணும்.அதை அவர் சூடிக்கறதை கண்ணாரக் கண்டு நெஞ்சார தரிசிக்கணும்!’ மனசுக்குள்ளே நினைச்சுண்டே போனவருக்கு, “இன்னும் ரோஜாப் பூ மார்க்கெட்டுக்கே வரலை சார்,வந்ததும் மொதவேலையா மாலைக்கட்டித் தந்துடறேன்!” கடைக்காரரோட பதில் கொஞ்சம் ஏமாத்தமா இருந்தது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 13 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

வெயிட் பண்ணிய அவர், பூ வந்ததும் ஒவ்வொரு பூவா பார்த்துப் பார்த்து எடுத்து அழகான மாலையா கட்டிக் குடுத்தார் கடைக்காரர். தான் நினைச்ச மாதிரியே மாலை அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம் பக்தருக்கு . மாலையை வாங்கிண்டு வேகவேகமா பரமாசார்யாளை தரிசிக்கப் புறப்பட்டார்.

மகாபெரியவாகிட்டே மாலையை தரணும்னு ஆசை ஆசையா போனவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துண்டு இருந்தது. அவர் அங்கே போய்ச் சேர்ந்த சில நிமிஷம் முன்னாலதான் மகாபெரியவா தரிசன நேரம் முடிஞ்சு உள்ளே எழுந்து போயிருந்தார்.

“இன்னிக்கு மறுபடியும் எப்போ பெரியவா தரிசனம் தருவார்? தன்னோட ஏமாற்றத்தை மனசுல அழுத்திண்டு, அங்கே இருந்த தொண்டர்கிட்டே கேட்டார்.
“பெரியவாளோட தரிசன நேரம் இன்னிக்கு முடிஞ்சுடுத்து. இனிமே நாளைக்குத்தான்!” சொன்னார்,தொண்டர்.

‘வாடாத மாலையை மகாபெரியவாளுக்குத் தரணும்னு நினைச்சுண்டு வந்தா,இப்படி ஆயிடுத்தே’ன்னு மனசு வாடிப் போயிடுத்து அவருக்கு.

அப்படியே சோர்ந்த முகத்தோட வீட்டுக்குப் போனார்.என்ன நடந்ததுங்கறதை ஒய்ஃப்கிட்டே வருத்தமா சொன்னார்.

“இதுக்குப்போய் மன சங்கடப்படலாமோ…நம்ம வீட்டுல இருக்கற காமாட்சி படத்துக்கு அந்த மாலையை சாத்துங்கோ.அம்பாளுக்கு சாத்தினாலே ஆசார்யாளுக்கு சாத்தினதா ஆகிடும்!” ஆறுதலா சொன்னா மனைவி.

‘நான் மனசுல நினைச்சது ஆசார்யாளுக்குன்னுதான். அம்பாளுக்குன்னு இல்லை. இது அவருக்குத்தான். இன்னிக்கு தாமதமானதுக்கு ப்ராயச்சித்தமா, நாளைக்கு ஒரு வெள்ளிக் கிண்ணத்தை ஆசார்யாகிட்டே சமர்ப்பிக்கப்போறேன்” கொஞ்சம் அழுத்தமா சொன்னவர் அந்த அறையில இருந்த ஒரு ஆணியில மாலையை அப்படியே மாட்டிவைச்சார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

மறுநாள் கார்த்தால ஆறுமணி இருக்கும்.அந்த ட்ரஸ்டியோட வீடு இருந்த ஏரியாவே பரபரப்பா இயங்க ஆரம்பிச்சுது. அதுக்கு காரணம், ‘மகாபெரியவா இந்தத் தெருவுல இருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு தரிசனத்துக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போறார்!” அப்படின்னு மடத்து சிப்பந்தி ஒருத்தர் சொல்லிட்டுப் போன தகவல்தான்.

எல்லாரும் அவசர அவசரமா பூர்ண கும்பம், புஷ்பம்,ஆரத்தித் தாம்பாளம், பழங்கள் இப்படி முடிஞ்சதை தயார் பண்ணி வைச்சுண்டு மகாபெரியவாளை வரவேற்கத் தயாரானா . சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல அந்தப் பகுதிக்கு வந்தார்,பரமாசார்யா. எப்பவும்போல வேகமான நடை. மளமளன்னு நடந்தவர், அந்த பக்தர் வீட்டு வாசலுக்கு வந்ததும், என்னவோ நினைச்சுண்டவர் மாதிரி ஒரு விநாடி நின்னார். யாருமே எதிர்பார்க்காத வகையில சட்டுன்னு உள்ளே நுழைஞ்சவர் ,அங்கே ஆணியில் மாட்டியிருந்த ரோஜா மாலையை எடுத்தார்.
இது என்னோடது,எனக்குத் தரேன்னு சொன்னது,அப்படின்னு உரிமையோட எடுத்துக்கற பாவைனல அந்த புஷ்ப ஆரத்தை எடுத்து சூடிண்டார், மகாபெரியவா, வழக்கமா கொஞ்ச நேரத்துலயே உதிர்ந்துடக் கூடியது பன்னீர் ரோஜா. ஆனா முதல்நாள் வாங்கின மாலை இன்னிக்குதான் பூத்த பூவுல தொடுத்த மாதிரி அப்படியே மலர்ந்து அழகா இருந்தது. ஒற்றை இதழ்கூட உதிரலை.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

நடக்கறதெல்லாம் கனவா? நிஜமான்னுகூட புரியலை பக்தருக்கு.கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் நிறைஞ்சு வழிய அப்படியே கைகளைச் சேர்த்துக் கூப்பினார்.

“என்ன, சந்தோஷமா? எனக்குன்னுதானே வாங்கினே? நானே எடுத்துண்டுட்டேன்!” சொன்ன பெரியவா,

“ஆமா எனக்குத் தரணும்னு வெள்ளிக் கிண்ணம் ஒண்ணை எடுத்து வைச்சியே, அது எங்கே?” கேட்க, ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே போனார் அந்த பக்தர்.

சட்டுன்னு பூஜை அறைக்குப் போனவர்,அங்கே தயார எடுத்து வைச்சிருந்த வெள்ளிக் கிண்ணத்தைக் கொண்டு வந்து மகாபெரியவாகிட்டே சமர்ப்பிச்சார்.

புது மணம் கமழ்ந்த ரோஜாமாலையைத் தரிச்சுண்டு, பூ மாதிரியே மென்மையான புன்னகையோட அங்கேர்ந்து புறப்பட்டார், மகாபெரியவா.

தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம் தரணும்’னு பக்தர் சொன்னதை, பக்கத்துல இருந்து கேட்டவர் மாதிரி, தானே நினைவுபடுத்தி வாங்கிண்டது பேராச்சரியம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories