.!
மறைந்த திரு. கிரேசி மோகன் வரைந்த பெரியவா ஓவியம்+கவிதை
நெறியவா!! கொண்டோர்க்(கு) உரியவா காஞ்சிப்
பெரியவா பாதம் பணிந்து -அரிஓம்
பவசங் கரதே சிகமே சரணம்
முனிபுங் கவரே மொழி….!
வானிடம் விட்டிந்த வையத்தில் சங்கரன்
மானுடமாய் வந்தயெம் மாமுனியே -ஊணுடல்
ஏகினும் வாஞ்சையாய் ஏளினாய்க் காஞ்சியில்
பாஹிமாம் பாதாம் புஜம்….!
ஆனை நரசிம்மம் ஆவா கனித்திட
தூணாய்த் தவத்திடை தேசிகரே -வீணாய்க்
கழிந்தது நாட்கள் குருவே திருவருளைப்
பொழிந்திடு பெற்றவள் போல்…!
அரியவா காப்பில், அரனவா சேர்ப்பில்
குறியவா அன்பே கடவுள் -பெரியவா
பட்டுத் தறியவா விட்டு வறியவா
கட்டும் கதரவா கட்டு….!
கைகாசு தீர்ந்திட கர்மவினை தீர்ப்பதற்கு
மெய்காசி போவதேன், மாமுனியாய் -வைகாசி
மாசம் அனுஷம்சந் யாசம் அனுஷ்டிக்க
தேசம் பிறந்தவரே தீர்வு…



