திருவல்லிக்கேணி ஸ்ரீதெள்ளிய சிங்கப் பெருமாள் பிரம்மோத்ஸவம்! இன்று பல்லக்கில்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்

thiruvallikeni perumal - 2026ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸ்ரீ தெள்ளிய சிங்கர் பிரம்மோத்ஸவத்தின் எட்டாம் நாளான (20.06.19) இன்று காலை பல்லக்கில், பெரிய மாட வீதிகளில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் நரசிம்மப் பெருமான் அழகியசிங்கர் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது

ஸ்ரீதேவி பூமிதேவி உபய நாச்சிமார்களுடன் தெள்ளிய சிங்கப் பெருமாள் மாட வீதிகளை வலம் வந்தார்

thiruvallikeni ther - 2026திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம ஸ்வாமி ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது! இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் ஜூன் மாதம் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூன் 15ஆம் தேதி கருடசேவை உற்சவம் நடைபெற்றது

thiruvallikeni - 2026பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது! நேற்று காலை 9 மணிக்கு உற்சவர் தெள்ளிய சிங்கர் பூமி தேவி ஸ்ரீதேவி நாச்சியாருக்கு சர்வ அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து பெருமான் தேரில் எழுந்தருளினார்!

thiruvallikeni2 - 2026மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மாடவீதிகளில் வலம் வந்த தெள்ளிய சிங்கப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் நேற்று இரவு திருமஞ்சனம் நடைபெற்றது.

இன்று லட்சுமி நரசிம்மர் திருக்கோலத்தில் பல்லக்கு உற்சவமும் நாளை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.  ஜூன் 22ம் தேதியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது

ஸ்ரீநரசிம்மனாக அவதாரம் செய்த ஸ்ரீமந்நாராயணன், திருவல்லிக்கேணியில் ஸ்ரீதெள்ளியஸிங்கராக இடது திருக்கரத்தால் பத்தர்களை ஆஹ்வான முறையில் அழைத்து, வலது திருக்கரத்தால் அருள் ஆசி வழங்குகிறார்.

thirruvallikeni - 2026ஸ்ரீதெள்ளியஸிங்கர் இன்று மிக அழகான திருக்கோலமான ஸ்ரீ.லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸேவை ஸாதிப்பது மிகவும் அற்புதமான ஸேவை! இன்று ஸ்ரீ.தெள்ளியஸிங்கருடன் சிறிய பல்லக்கில் ஸ்ரீசேனை முதலியாரும் எழுந்தருளியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.