ருஷி வாக்கியம் (74) – பக்திப் படிக்கட்டுகள்

rv2 2 - 2026
இறை பக்தி பதினோரு படிக்கட்டுகளோடு கூடியது என்று பாகவத ஆச்சாரியர்கள் வர்ணித்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் இந்த பதினோரு ‘பூமிகைகள்’ எனப்படும் படிக்கட்டுகளைப் பற்றி அறிந்து கொண்டால் ஒன்றன்பின் ஒன்று என்றல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து எவ்வாறு பரிபூரணமாகிறது என்பதை உணர முடியும்.

முதல் படிக்கட்டு – ப்ரதமம் மஹதாம் சேவா – சத் புருஷர்களை சேவிப்பது.

இரண்டாவது படிகட்டு – தத்தயா பாத்ரதா தத: – அவர்களின் தயைக்குப் பாத்திரமாவது

மூன்றாவது படிக்கட்டு – ஸ்ரத்தா தேஷாம் தர்மேஷு – அவர்கள் கூறும் தர்மத்தின் மீது சிரத்தை கொண்டிருப்பது.

நான்காவது – ததோ ஹரிகுண ஸ்ருதி: – அவர்கள் மூலம் கேட்டறிந்த பகவானின் குணங்களை சிரத்தையாக சிரவணம் செய்வது.

ஐந்தாவது – அதோ ரத்யஜ் குரோத் பத்தி: – இறைவனின் குணங்களைக் கேட்டவுடனே இறைவன் மேல் ப்ரீத்தி ஏற்படுவது

ஆறாவது – ஸ்வரூபாதி கத ஸ்தத: – பகவானின் ஸ்வரூபத்தை இதயத்தில் மனனம் செய்வது.

ஏழாவது – ப்ரேம வ்ருத்தி: பரானந்தே – ஆனந்த சொரூபனான பகவானிடம் பிரேமை விருத்தியாவது.

எட்டாவது – தஸ்யார்த ஸ்புரணம் தத: – ப்ரேமையின் சொரூபத்தை அறிந்து பக்தியே சிறந்த பிரயோஜனம் என்றுணர்வது.

ஒன்பதாவது – பகவத் தர்ம நிஷ்டாத: – இறைவனை உத்தேசித்து செய்யும் தர்மங்களில் நிஷ்டை ஏற்படுவது.

பத்தாவது – ஸ்வஸ்மின் தத் குண சாலிதா – தன்னில் இறைவனின் குணங்களைப் பெறுவது.

பதினொன்று – ப்ரமோத: பரமா காஷ்டா: ததிதா பக்தி பூமிகா: – முழுமையாக மனது இறைமயமாகி ஆனந்தம் அடைவது.

“பவதரணார்த்தே பக்தி பூமிகா: !” – முக்தி பெறுவதற்கு உதவும் மிக உயர்ந்த பக்தி இத்தகைய படிகளில் உள்ளதென்று விவரிக்கிறார்கள்.

பக்தியின் இந்த பதினோரு படிக்கட்டுகளிள், முதல் மூன்றும் இன்றியமையாதவை. அவற்றின் பொருளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

பக்தியின் முதல் படிக்கட்டு மகாத்மாக்களின் சேவை. மகாத்மாக்களை சேவிப்பதிலிருந்து பக்தி மார்க்கம் தொடங்குகிறது. ஏனென்றால் இறைவன் ஒருவன் உள்ளான் என்று யாரால் தெரிந்து கொள்கிறோம்? மகாத்மாக்களினால்தான்! அவர்கள் சாஸ்திர வாக்கியங்கள், அனுபவ வாக்கியங்கள், சாதனையின் ரகசியங்கள்… போன்றவற்றை போதிப்பார்கள். அவற்றுக்கு அவர்களே எடுத்துக்காட்டுகளாக விளங்குவார்கள். அப்படிப்பட்ட மகாத்மாக்களை சேவிக்கவேண்டும்.

உதாரணத்திற்கு விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற மகாத்மாவை சேவித்ததால் அவருக்கிருந்த அனேக சந்தேகங்கள் தீர்ந்தன. நூல்களைப் படிப்பத்தாலும் நம் யுக்தியாலும் பலவித அறிவாற்றல்களைப் பெற முடியும். ஆனால் மகாத்மாக்களின் சாங்கத்யம் மூலம் யுக்தியால் அறிந்து கொள்வதைவிடவும் நூல்களைப் படித்து அறிந்து கொள்வதைவிடவும் சிறப்பான உண்மையை அறிய முடியும். ஏனென்றால் சத்தியம் நூல்களாலோ யுக்தியாலோ அறியப்படுவதில்லை. அது அந்த சத்தியத்திற்கு எடுத்துக்காட்டுகளான சத் புருஷர்களால் அறியப்படுகிறது. அதனால் முதல் பூமிகையாக மகாத்மாக்களின் சேவையைக் கூறியுள்ளார்கள்.

இரண்டாவது படிகட்டு அவர்களின் கருணைக்குப் பாத்திரமாவது. மகாத்மாக்களின் அறிமுகம் ஏற்பட்டால் மட்டும் பலனில்லை. அவர்களின் பார்வை நம் மீது விழ வேண்டும். அவர்களின் தயை நமக்குக் கிடைக்க வேண்டும். ஏனென்றால் மகாத்மாக்களுக்கு சுயநலம் இருக்காது. சுயநலம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் கவர்ந்திழுக்க முடியும்.

ஒருவருக்கு பணம் தேவைப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். பணத்தைக் காட்டி அந்த மனிதரை நாம் பணியச் செய்ய முடியும். அல்லது வேறு ஏதாவது தீய பழக்கம் இருந்தால் அது தொடர்பான பொருளைக் காட்டி வழிக்குக் கொண்டுவர முடியும். புகழ் கிடைக்கும்படி செய்கிறேன் என்று சொல்லிக் கூட வசப்படுத்த முடியும். ஆனால் மகாத்மாக்கள் எதற்கும் அடிமையாக மாட்டார்கள். அவர்களுக்கு காந்தா, கனகம், கீர்த்தி… போன்ற எவற்றின் மீதும் ஆசை இருக்காது. அப்படிப்பட்டவரை நம்மீது பார்வைபடும்படி எவ்வாறு செய்து கொள்வது? கள்ளமில்லாத பக்தியை நாம் அவரிடம் காட்ட முடிந்தால் அவருடைய தயைக்குக் காரணமாவோம்.

ஒருமுறை அவருடைய கருணை கிடைத்துவிட்டால் நிச்சயம் நாம் உய்வடைந்து விடுவோம். அதனால் பக்தியின் இரண்டாவது படி மகாத்மாக்களின் கருணைக்குப் பாத்திரமாவது.

இங்கு நாம் பரீட்சித்து மகாராஜாவைப் பற்றி சிந்தித்துப் பார்க்கையில், அவனுக்கு முதன் முதலில் மகாத்மாக்களின் சாங்கத்தியம் கிடைத்துவிட்டது. சுக யோகீந்திரர் கிடைத்துவிட்டார். ஆனால் அதோடு நின்றுவிட்டிருந்தால் அவன் உய்வு பெற்றிருக்க முடியாது. அவனுக்கு இரண்டாவது பூமிகையும் கிடைத்தது. அதாவது சுக யோகியின் தயை பரீட்சித்து மகாராஜாவுக்குக் கிடைத்தது. அதனால்தான் அவனருகில் அமர்ந்து அவர் பாகவதம் கூறினார். அதனால் இரண்டாவது படிக்கட்டில் மகாத்மாக்களின் கருணைக்குப் பாத்திரமாவதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இனி மூன்றாவது படிக்கட்டு. இது மிகவும் முக்கியமானது. மகாத்மா கிடைத்துவிட்டார். அவருடைய கருணையும் கிடைத்துவிட்டது. அவர் நல்ல கருத்துக்களை போதிக்கிறார். ஆனால் அந்த சொற்களின் மேல் சிரத்தை ஏற்பட வேண்டும். இது மூன்றாவது படிக்கட்டு.

அதாவது பெரியவர்கள் ஏதோ சொன்னார்கள் என்று அப்போதைக்கு கேட்டு சும்மா இருக்காமல், “அவர் கூறியவை சத்திய வார்த்தைகள்! அவை நம்மை உய்விக்கும்” என்ற திடமான நிச்சய அபிப்ராயம் ஏற்பட்டு அந்த வாக்கியங்களின் மீது மனதை நிலைநிறுத்தி உள்ளத்தால் கிரகித்து அவற்றை மனனம் செய்வதும் கடைபிடிப்பதும் நிகழவேண்டும். இது மகாத்மாக்களின் சொற்களில் சிரத்தை கொள்வது எனப்படும் மூன்றாவது படி.

இந்த மூன்று படிக்கட்டுகளும் பக்தியின் பதினொரு பூமிகைகளில் மிகவும் இன்றியமையாதவை.

மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்ப்போம்! முதலில் மகாத்மாக்கள் கிடைப்பது. இரண்டாவது அவர்களின் தயை கிடைப்பது. மூன்றாவது அவர்கள் கூறிய சொற்களின் மேல் சிரத்தை ஏற்படுவது.

இந்த மூன்று படிகளையும் நன்கு திடமாக பற்றிக் கொள்ள முடிந்தால் அடுத்தடுத்த படிகளில் எளிதாக பிரவேசிக்க முடியும்! இம்மூன்றையும் நன்கு புரிந்து கொள்வோமாக!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories