இன்று… ஸ்ரீரங்கம் ரங்கநாயகித் தாயார் ஜேஷ்டாபிஷேகம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி நெல்லை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்

jeyshtabhisekam srirangam - 2026

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தாயார் சன்னதி ஜேஷ்டாபிஷேகம்- காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.

இன்று (19.07.19 ) ஸ்ரீ.ரங்கநாயகித் தாயாருக்கு ஜ்யேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்காக, காலை 7.30 மணிக்கு மேல் அம்மா மண்டபத்தில் இருந்து காவிரியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு சுமார் 9.30 மணி அளவில் தாயார் ஸன்னதி வந்தடைந்தனர். இதை அடுத்து, புனித காவிரி நீரால் ஜ்யேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, காவிரி புனித நீர் கருட மண்டபம் வந்து, அங்கிருந்து சக்கரத்தாழ்வார் சன்னதி, வசந்த மண்டபம் வழியாக தாயார் சன்னதி எழுந்தருளச் செய்யப் பட்டது.

தாயார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தாயார் சந்நிதியில் காத்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.