நடக்காததையும் நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் !

Published:

narasimar - 2026நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்.

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்.  இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது. ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். “பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே!lakshminarasimar e1565409466174 - 2026துயரம் போக்கும் ஸ்ரீ நரசிம்ம பாடல்

எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படி கால் தொடங்கி,
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம்.
திருவோணத் திருவிழாவில்
அந்தியம் போதிலரியுரு வாகி
அரியை யழித்தவனை,
பந்தனை தீருப்பல் லாண்டு
பல்லாயிரத் தாண்டென்று பாடுதுமே
திருப்பல்லாண்டு 6.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.2 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பூதமைத் தொடு வேள் வியைந்து
புலன்களைந்து பொறிகளால்,
ஏதமொன்று மிலாத வண்மையி
னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,
நாதனை நரசிங்கனை நவின்
றேத்துவார் களுழக்கிய,
பாத தூளி படுதலாலிவ்
வுலகம் பாக்கியம் செய்ததே.
பெரியாழ்வார் திருமொழி 4.4.6.

பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்.
ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்
கொன்று மோர் பொறுப்பிலனாகி,
பிள்ளையாச் சீறி வெகுண்டு
தூண்புடைப்பப் பிளையெயிற் றனல்
விழிப் பேழ்வாய், தெள்ளிய
சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே.
பெரிய திருமொழி 2.3.8.

துயர வேளையில், ஆபத்துக் காலங்களில், சங்கடமான சந்தர்ப்பங்களில் உடனடியாக தாமதமின்றி நம்பெருமானின் சகாயத்தைப் பெற, ஸ்ரீ நரசிம்ம விசயமாக ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யமான பாசுரங்களை, மேல் சொன்னவைகளை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்!

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img