ஏகாதசியிலிருந்து அனைவருக்கும் உண்டு இலவச லட்டு! திருப்பதி தேவஸ்தானம்!

Published:

thirupathi 2 - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலை லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், முதல்கட்டமாக அனைத்து பக்தர்களுக்கும் வைகுண்ட ஏகாதசி முதல் (ஜனவரி 6) ஒரு லட்டு இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

thirupathi laddu - 2026

தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்று வரும் பக்தர்களுக்கு மட்டும் இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

thirupathi - 2026

இதையடுத்து சலுகை விலையிலான லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு இலவச லட்டு வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Related articles

Recent articles

spot_img