கேப்டவுன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 286 ரன்னுக்கு சுருண்டது

விளையாட்டு

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரர்களை புவனேஷ்வர்குமார் தனது பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன்பின் களமிறங்கிய டி வில்லியர்ஸ், டூ பிளசி, டி காக் உள்ளிட்டோர் நிதானமாக ஆட அந்த அணி ரன்கள் குவிக்க முடிந்தது.
இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் பந்து வீசிய 5 வீரர்களுக்கும் விக்கெட் கிடைத்தது. இந்திய அணியில் அறிமுக வீரராக பூம்ரா விளையாடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.