india sa test - 2026

தென் ஆப்பிரிக்கா பெற்ற எளிதான வெற்றி!

விளையாட்டு Featured உலகம்
india sa test - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் – நான்காவது நாள்

தென் ஆப்பிரிக்கா அணி சுலபமாக வெற்றி பெற்றது. அவர்களின் இந்த வெற்றிக்கு மழை ஒரு முக்கிய காரணம். காலையில் இருந்தே ஜோகன்னஸ்பர்கில் மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் உணவு இடைவேளை வரை ஆட்டம் நடக்கவில்லை. தென் ஆப்பிரிக்க நேரப்படி மதியம் 3.45க்கு ஆட்டம் தொடங்கியது. பிட்ச் காய்ந்திருந்தாலும் அவுட் ஃபீல்டு ஈரமாகவே இருந்தது. அவுட்ஃபீல்டை காயவைக்கப்பயன்படுத்திய இயந்திரம் எரிபொருள் இல்லாமல் சிறுதி நேரம் ஃபீல்டிலேயே நின்றுவிட்டது. 

இன்றைய தினம் 34 ஓவர்கள் வரை விளயாடலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி 27.4 ஓவரில் வெற்றியைப் பெற்றது. முதல் இரண்டு ஓவர்கள் வீசுவதற்குள்ளாகவே பந்து மிகவும் ஈரமாகிவிட்டது. இந்திய அணி பந்தை மாற்ற வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அம்பயர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. 

ஈரமான பந்தோடு பவுலிங் செய்வது கடினம். தென் ஆப்பிரிக்க அணி எடுக்க வேண்டிய ஸ்கோரும் குறைவு. எனவே அந்த அணி வெற்றி பெறுவதுதான் ஒரே முடிவு. இதிலே இந்திய பவுலர்களை குற்றம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்தப் பொட்டியில் நாம் தோற்றதற்கு காரணம் சொல்ல வேண்டும் என்றால், பேட்ஸ்மென்களைத்தான் காரணம் சொல்ல வேண்டும். இந்த டெஸ்ட் சீரீஸை யார் வெற்றிகொள்வார் என்பது இனி கேப்டவுனில் நடக்கப்போகின்ற இறுதி டெஸ்டில் முடிவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.