காமன்வெல்த் போட்டிகள்; ஐந்தாம் நாளில்..!

commonwealth games - 2026

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், பர்மிங்ஹாம் – ஐந்தாம் நாள் – 02.08.2022

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

காமன்வெல்த் போட்டிகளில் ஐந்தாம் நாளிலும் இந்திய வீரகள் மேலும் பதக்கங்கள் பெற்றனர். இந்தியா இதுவரை 13 பதக்கங்கள் பெற்றுள்ளது. 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள். லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி நால்வர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தனர்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் 17-10 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்தியாவின் விகாஸ் தாகூர் 96 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாட்மிண்டன் கலப்பு அணி போட்டியில் இந்தியா மலேசியாவிடம் 2-1 என்ற கணக்கில் தொற்றுப்போனது. பி.வி. சிந்து தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். ஆனால் ஆண்கள் இரட்டையர் அணியும், கிடம்பி ஸ்ரீகாந்தும் தோற்றுப்போனார்கள். ஸ்ரீகாந்த் தன்னைவிட தரவரிசைப் பட்டியலில் கீழே உள்ள மலேசிய வீரரிடம் தோற்றுப் போனது சோகம். டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணி இறுதிப்போட்டியில் விளையாடியது.

முதல் போட்டியில் ஷரத் கமல் 7-11, 14-12, 3-11, 9-11 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றுப்போனார். இரண்டாவது போட்டியில் சத்யன் ஞானசேகரன் யூ-பாங்கை 12-10, 7-11, 7-11, 11-4 என்ற கணக்கில் வென்றார். மூன்றாவது போட்டியில் ஹர்மீத் தேசாய் சிங்கப்பூர் அணியின் கிளாரன்ஸ் ச்யூவை 11-8, 11-5, 11-6 என்ற செட் கணக்கில் வென்று அணிக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

ஆண்கள் 67 கிலோ குத்துச் சண்டைப் போட்டியில் ரோஹித் டோகாஸ் கானா நாட்டு வீரரை தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். முரளி ஸ்ரீஷங்கர், முகம்மது அனீஸ் இருவரும் நீளத்தாண்டுதல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். இந்திய வீராங்கனை ட்யூடி சந்த் 100 மீட்டர் தகுதிச் சுற்றில் நாலாவதாக வந்தார். எனவே அடுத்த சுற்றுக்குத் தேர்ச்சி பெறவில்லை.

ஸ்குவாஷ் பெண்கள் போட்டியில் சாரா குருவில்லா பாகிஸ்தானிய வீராங்கனையைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றுப் போனது.

ஸ்குவாஷ் ஆண்கள் அரையிறுதிப் போட்டியில் சௌரவ் கோஷல் நியூசிலாந்து வீரரிடம் தோற்றுப்போனார். இனி அவர் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆடுவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories