IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

Published:

india vs england odi 2026 - 2026

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 – இந்தியா அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          டி-20 தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தபின்னர், இந்திய அணி இங்கிலாந்தில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடுகிறது. இதில் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் நேற்ரு (14.07.2026) நடந்தது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடியது.

          இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட் (43 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தார். அவருடன் களமிறாங்கிய மற்றொரு தொடக்க வீரர் ஜேகப் பெதல் (14 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த ஜோ ரூட் (76 ரன்) சிறப்பாக ஆடினார். தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த குர்நூர் ப்ரார் போலவே பும்ரா, பிரசித் கிருஷ்ணா இருவரும் ஹாரி ப்ரூக் (1 ரன்), ஜாஸ் பட்லர் (5 ரன்), சாம் கரண் (பூஜ்யம் ரன்) ஆகியோரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தனர். அதன் பின்னர் வில் ஜேக்ஸ் (20 ரன்) மற்றும் லியம் டாசன் (68 ரன்) இருவரும் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் அக்சர் படேல் நான்கு விக்கட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியை 47.5 ஓவர்களில் 258 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக்கினார்.

          இரண்டாவதாகக் களமிறங்கிய இந்திய அணியில் ஒருநாள் ஆட்டத்தின் வல்லுநர்களாகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா (21 பந்துகளில் 11 ரன்) மாற்றும் விராட் கோலி (6 பந்துகளில் 5 ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷுப்மன் கில் (80 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (35 ரன்) இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை நிதானமாக மேலெடுத்துச் சென்றனர். கில் காயம் காரணமாக வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்த பின்னர் உள்ளே வந்த கே.எல். ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 27.5 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்திருந்தது. இன்னும் 95 ரன் தேவைப்பட்ட நிலையில் வாஷிங்க்டன் சுந்தர் (52 ரன்), அக்சர் படேல் (57 ரன்) இருவரும் இணைந்து இந்திய அணிக்கு, 45.2 ஓவர்களில் (262 ரன்) வெற்றியைத் தேடித்தந்தனர்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

          டி-20 தொடரில் சொதப்பிய அதே வீரர்கள் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றியைப் பெற உதவியது மகிழ்ச்சியை அளிக்கிறது. அக்சர் படேல் (4 விக்கட், 57 ரன்) தன்னுடைய சிறந்த ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். நாளை (16.07.2026) இரண்டாவது ஒருநாள் ஆட்டம் கார்டிஃப் மைதானத்தில் நடைபெறுகிறது.    

இந்திய இங்கிலாந்து ஒருநாள் தொடர் – இங்கிலாந்து அணி அபார வெற்றி

          இந்தியா இங்கிலாந்து அனிகலுகிடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 14இல் தொடங்கியது. முதல் ஆட்டம் பர்மின்காமில் நடந்தது. இங்கிலாந்து அணியை  (258 ரன்) இந்திய அணி (45.2 ஓவர்களில் 262/4) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஒருநாள் ஆட்டம் (233 ரன்), இங்கிலாந்து அணி (44.1 ஓவர்களில் 235/6) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          மூன்றாவது ஒருநாள் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 19இல் நடைபெற்றது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத்தீர்மானித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இந்திய ணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். பென் டக்கட் (135 பந்துகளில் 141 ரன், 18 ஃபோர், 1 சிக்சர்), ஜேக்கப் பெதல் (93 பந்துகளில் 91 ரன், 11 ஃபோர், 2 சிக்சர்), ஜோ ரூட் (48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ரன், 9 ஃபோர்), ஜாஸ் பட்லர் (13 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் அதிரடியாக ஆடியதால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 387 ரன் எடுத்தது. குர்னூர் ப்ரார் 10 ஓவர்களில் 97 ரன் கொடுத்தார். பிற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை. அர்ஷதீப் சிங் (10 ஓவரில் 72 ரன்), பிரசித் கிருஷ்ணா (10 ஓவரில் 69 ரன்), பிரின்ஸ் யாதவ் (10 ஓவரில் 79 ரன்), அக்சர் படேல் (10 ஓவரில் 61 ரன்) என அனைவருமே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஜோ ரூட்டை இந்த்த் தொடர் முழுவதுமே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

          இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணி 38 ரன் என்ற் இமாலய இலக்கை அடைய சரியான முறையில் ஆட்டத்தைத் டொடங்கினர். ரோஹித் ஷர்மா தான் ஒரு ஹிட்மேன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். அவர் 110 பந்துகளில் 138 ரன், 17 ஃபோர், 5 சிக்சர் அடித்தார். அவருடன் இன்னிங்க்சைத் தொடங்கிய ஷுப்மன் கில் 84 பந்துகளில் 77 ரன் அடித்தார். அவருக்குப்பின் வந்த விராட் கோலி 60 பந்துகளில் 74 ரன் அடித்தார். ஆனால் பிற வீரர்களான இஷான் கிஷன் (14 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (பூஜ்யம் ரன்), கே.எல். ராகுல் (12 ரன்), அக்சர் படேல் (2 ரன்) ஆகியொர் சரியாக ஆடாததால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 360 ரன் அடித்து 27 ரங்களில் தோல்வியடைந்தது.

          இதனால் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற ஆட்டக்கணக்கில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. ஷிவம் துபே ஆடவில்லை; இதனால் ஆறாவது பந்துவீச்சாளர் இல்லாமல் போனது. குல்திப் யாதவை இந்தத் தொடர் முழுக்க ஆடாமல் வெளியே உட்காரவைத்தது ஏன் எனத் தெரியவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்கள் 26 எக்ஸ்ட்ரா ரன்கள் கொடுத்தார்கள். தோல்வி வித்தியாசம் 27 ரன்கள். இந்திய அணியின் தேர்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

Related articles

Recent articles

spot_img