கழிவு நீர் கால்வாயில் ஆண்டாள் சிலை! வருவாய் துறையிடம் ஒப்படைப்பு!

தமிழகம் பொது தகவல்கள்
andal - 2026

கும்பகோணத்தில் உள்ள கவரை என்னும் இடத்தில் இன்று துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்திக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ஒரு பிளாஸ்டிக் கவர் கிடைத்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது, அதில் ஒன்றரை அடி உயரம் கொண்ட உலோகத்தினால் ஆண்டாள் சிலை இருந்துள்ளது. அதனை கண்டவுடனே, துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து, அந்த ஆண்டாள் சிலையை வருவாய்துறையினரிடம் நகராட்சி ஒப்படைத்துள்ளது.

யாரேனும் அச்சிலையை திருடிக் கொண்டு வந்த போது, வழியில் சிக்கிக் கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். அதனால், சிலையை கால்வாயில் வீசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து, வருவாயத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.