பொங்கல் சலுகை: 50% தள்ளுபடி, இலவச கேப் வசதி..! அசத்தும் மெட்ரோ ரயில்!

Published:

metro - 2026

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 17-ஆம் தேதி காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகளுக்கு இலவச ‘கேப்’ வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசினர் தோட்டம், டி,எம்,எஸ் ரயில் நிலையங்களிலிருந்து மெரினா கடற்கரைக்கு கேப் இயக்கப்படும் எனவும் காணும் பொங்கலன்று மெரினாவுக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img