கணவன் கள்ளத் தொடர்பு.. தட்டி கேட்டால் கொலை மிரட்டல்! பீதியில் திமுக பிரமுகர் மனைவி!

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
dmk - 2026

15 வயது மூத்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது இது பற்றி ஸ்டாலினிடம் புகார் கூறியதால் என்னை கொலை செயது விடுவேன் என மிரட்டுகிறார் என, திமுக நிர்வாகியின் மனைவி ரம்யா சென்னை கமிஷனர் ஆபீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, அடையாறை சேர்ந்தவர் ரம்யா. 28 வயதாகிறது..இவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவின் சுருக்கம் இதுதான்: ” என் சொந்த ஊர், காஞ்சிபுரம். வாணியம்பாடியில் தங்கி, ஏழாம் வகுப்பு வரை படித்தேன். என்னுடன் அதே ஊரைச் சேர்ந்த சாரதிகுமாரும் படித்தார். நான் ‘ஆர்க்கிடெக்ட்’ என்ற கட்டட கலை படிப்பு முடித்தேன். சாரதிகுமாரும், ‘சிவில் இன்ஜினியரிங்’ படித்தார்.

இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், 2016 பிப்ரவரி 10ல் கல்யாணம் செய்தோம்; 2 வயசில் பெண் குழந்தை உள்ளது. ஆனால் என்னை கல்யாணம் செய்வதற்கு முன், சாரதிகுமார், சேலம் சட்ட கல்லுாரியில் படித்தபோது, அவரை விட, 15 வயது மூத்தவரான, சத்யபிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யபிரியாவுக்கு கல்யாணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர்.

sahyapriya - 2026

இருந்தாலும், என் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டுகிறார்’

எனக்கு வரதட்சணையாக தந்த 140 சவரன் நகை, 20 லட்சம் ரூபாயை கள்ளக் காதலியிடம் என் கணவர் கொண்டு போய் கொடுத்தார்.. அந்த சமயம் நான் கர்ப்பமானேன்.. என் தாய் வீட்டிற்கும் பிரசவத்துக்கு அனுப்பவில்லை.. என் கணவர், வாணியம்பாடி நகர திமுக செயலர். அவர் பதவி, குடும்ப கவுரவம் கருதி, வெளியில் சொல்லாமல் இருந்தேன்.

எனக்கு பிரசவம்கூடசத்யபிரியாவின் வீட்டில் தான் நடந்தது.. அங்கு இருக்க பிடிக்காமல், 2 நாளில் வாணியம்பாடிக்கு வந்து விட்டேன். என் கணவருக்கு, சத்யபிரியா மட்டுமின்றி, வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதால், பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன்.. உயிருக்கு பயந்து, தற்போது, சென்னை, அடையாறில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.