குழந்தை திருமணம்: ரூ.1 லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Published:

child mariage - 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் ஆண்டாபட்டு கிராமத்தில் குழந்தைத் திருமண சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கோ, 21 வயது பூர்த்தியடையாத ஆணுக்கோ திருமணம் செய்து வைத்ததால் அவர்களது கல்வி தடைபட்டு எதிர்காலத்தில் சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். முக்கியமாக பெண் குழந்தைகளின் வளர்ச்சி ஒட்டுமொத்தமாக தடைபடும்.

எனவே, குழந்தைத் திருமணம் செய்வது அல்லது குழந்தைத் திருமண ஏற்பாட்டில் பங்கு பெறுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. அதன்படி, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

யாராவது குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடு செய்தால் இலவச உதவி எண்களான 1098, 181 மற்றும் 04175-238181, 04715 233810 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img