mother - 2026

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மேந்திரன்… இவரது மனைவி சுகன்யா. இவருக்கு வயது 27 ஆகிறது. கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றன.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். மூத்த குழந்தை பவ்யாவுக்கு 4 வயசு. கிரண்யா என்ற குழந்தைக்கு வெறும் 4 மாதம்தான் ஆகிறது.

தம்பதிக்குள் வழக்கமாக சண்டை வரும்போல் தெரிகிறது. நேற்று முன்தினமும் தகராறு வெடித்துள்ளது. இதனால் மனம் உடைந்த சுகன்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் எதற்காக இவர்களுக்குள் பிரச்சனை என தெரியவில்லை.

அப்போது சுகன்யாவின் உடலை கண்டு மகள் பவ்யா கதறி கதறி அழுதாள்.. அம்மா. வா..ம்மா.. என்று அந்த குழந்தை அழுதது அங்கிருந்த எல்லோரின் மனசையும் பிசைந்தது. பவ்யா அழுவதை பார்த்து கிராம மக்களே அழுதனர். தாயின் சடலம் பக்கத்திலேயே தவித்த குழந்தையை யாராலும் சமாதானப்படுத்தவே முடியவில்லை.

இதனிடையே மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சுகன்யாவின் தந்தை ஆறுமுகம் தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் தந்தார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் கல்யாணம் ஆகி 4 வருடங்களே ஆவதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் மற்றொரு புறம் நடக்கிறது. ஆனால், பவ்யாவின் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending