snake 1
கோப்பு படம்

சித்தாமூர் அடுத்த நெட்ரம்பாக்கம் ஊராட்சியில் கீழ் சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (47). கூலித்தொழிலாளி. இவரது, மனைவி வள்ளியம்மாள் (40).

இருவரும் நேற்று முன்தினம் இரவு அவர்களது குடிசை வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் கூரையில் இருந்து விஷப்பாம்பு ஒன்று, வள்ளியம்மாள் மீது விழுந்து, அவரது கையில் கடித்தது. வள்ளியம்மாள் அது பாம்பு என்று தெரியாமல் கையை உதறியதால், பாம்பு கணேசன் மீது விழுந்து அவரையும் கடித்தது. இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending