karur 2

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருர் மாவட்டத்தை சேர்ந்த கொரோனா தொற்றால் சிகிச்சைப் பெற்று வந்த கடைசி நபர் டிஸ்சார் செய்யப்பட்டார். பழங்கள் கொடுத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார்.

கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் 181 நபர்களும், அச்சம் காரணமாக 119 நபர்கள் என மொத்தம் 300 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து சிறப்பான மருத்துவ சிகிச்சையின் காரணமாக இதுவரை 276 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர் வீட்டுக்குச் சென்று உள்ளனர். இதில் பிறந்த குழந்தை முதல் 95 வயது முதியவர் வரை அடங்கும்.

தற்போது கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 பேர்கள் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 41 நபர்களும் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். இந்நிலையில், இன்று ஒரு பெண் மட்டும் கடைசியாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending