baby 1

கணவன் இறந்து மூன்று வருடங்களான நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா அரசு மருத்துவமனையில் கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் வயிற்று வலியின் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சுமார் இரண்டரை மணி அளவில் வந்த பெண் ஒருவர், தனக்கு மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அப் பெண்ணை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அப் பெண் கர்ப்பமாக இருப்பதாக கண்டறிந்தனர். மேலும் அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அதில் அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அப்பெண்ணிடம் அரசு மருத்துவர்கள் விசாரித்தபோது, அப்பெண் தனது கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆனதாக தெரிவித்துள்ளார். கணவர் இல்லாத நிலையில் விதவைப் பெண் ஒருவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

அதனைத்தொடர்ந்து நெகமம் போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே சுல்தான்பேட்டை ஓடக்கல் பாளையத்தை சேர்ந்த அப்பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா அந்தப்பெண் கூறியதுபோல அவரது கணவர் இறந்து மூன்றாண்டுகள் ஆகி விட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending