2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர்! கட்சியிலிருந்து நீக்கம்!

கிரைம் நியூஸ் தமிழகம்
vankodumai

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேனி அருகே 61 வயது அதிமுக பிரமுகர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

தேனி கோம்பை அ.தி.மு.க. பேரூர் நகர பொருளாளராக இருப்பவர் கணேசன் (வயது 61) அப்பகுதியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்திருக்கிறார். பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருக்கிறார்.

பின்னர் நல்லவரைப் போல வீட்டில் கொண்டு வந்து அந்த சிறுமியை விட்டுவிட்டு சென்றிருக்கிறார் கணேசன். சிறுமியை தாயார் குளிக்க வைக்கும் போது உடலில் இருந்த காயங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் கணேசனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, 2 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து கணேசன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது கணேசன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.