பிறந்தது பெண் என்பதால் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய்!

கிரைம் நியூஸ் தமிழகம்
amma

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 3 மாத பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பெருந்துறையை அடுத்துள்ள மூங்கில் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் குணசேகரன், சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 9 வயதில் நிதர்சனாஎன்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2வதாக சங்கீதா கர்ப்பமான நிலையில் ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மீண்டும் அத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

amma

இதனால் மனமுடைந்த குணசேகரனின் மனைவி சங்கீதா வீட்டிலுள்ள வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு பிறந்த 3 மாதங்களே ஆன பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்து விட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உடல்களை கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.