வீட்டிற்கு கூப்பிட்ட காதலி! சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி!

கிரைம் நியூஸ் தமிழகம்
murder - 2026

சிதம்பரத்தில் காதலி வீட்டிற்கு சென்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காதலியின் தாயார், அண்ணன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (21). இவரும் சிதம்பரம் அரங்கநாதன் தெருவில் வசிக்கும் பாபு மகள் 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாதகவும், இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அன்பழகன் செல்போனில் சிறுமி குறித்து வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று அன்பழகனை, சிறுமியான காதலி தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தாயார் சத்யா, அண்ணன் ஜீவா உள்ளிட்டோர் சிறுமி பற்றிய வீடியோவை தருமாறு கேட்டு அன்பழகனை அடித்தும், அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். உடனே உடலை வீட்டிலேயே வைத்து கொலையை மறைக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் சி.முருகேசன், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்முருகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞர் அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

மேலும் சிதம்பரம் நகர காவலர் வழக்குப் பதிவு செய்து தந்தை பாபு, தாயார் சத்யா, அண்ணன் ஜீவா, காதலியான சிறுமி ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.