
போலி சான்றிதழ் தயாரித்து இ பாஸ் பெற்றதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற எஸ்டிபிஐ கூட்டத்துக்குச் செல்வதற்காக, இ-பாஸ் பெறுவதற்கு, தனது தந்தை இறந்துவிட்டதாகவும், அதற்குச் செல்வது போலும் போலியாக ஒரு இறப்புச் சான்றிதழ் தயாரித்துள்ளார் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்.
இதன் பின்னர், திண்டுக்கல்லில் நடைபெற்ற எஸ்டிபிஐ கூட்டத்திற்குச் சென்றுள்ளார் அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக். இதை அடுத்து நெல்லை முபாரக் மற்றும் 7 பேர் மீது நெல்லை மருத்துவகல்லூரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முத்திரை மற்றும் மருத்துவர் கையொப்பம் இட்டு போலியாக ஒரு சான்றிதழ் தயாரித்ததாக மோசடி வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

