குடி போதையில் கணவர் செய்த செயல்.. பொறுமை இழந்து போட்டுத் தள்ளிய மனைவி!

கிரைம் நியூஸ் தமிழகம்
mery

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ளது நகலூர் என்ற பகுதி. இங்கு வசித்து வந்தவர் பிரான்ஸ் சேவியர் – மதலைமேரி தம்பதி. 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

மேரிக்கு 41 வயதாகிறது.. சேவியர் ஒரு கூலி தொழிலாளி. ஆனால் சரியாக வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். இதில் சேவியருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. அடிக்கடி தண்ணியை போட்டுவிட்டு மேரியுடன் சண்டை தகராறு செய்தபடியே இருந்துள்ளார்.

இதனால் எப்ப பார்த்தாலும் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விடுவது மேரியின் வழக்கமாக இருந்திருக்கிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று அம்மா வீட்டில் இருந்துள்ளார் மேரி. வழக்கம்போல் அங்கேயும் போய் சேவியர் சண்டை போட்டுள்ளார். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி, குடும்பத்தினரையும், பிள்ளைகளையும் தெருவில் எல்லார் முன்பும் அசிங்கமாக திட்டி உள்ளார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத மேரி, கீழே கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து சேவியர் தலையில் தூக்கி போட்டார்.

mery

இதில் படுகாயமடைந்த சேவியர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து அந்தியூர் போலீசார் விரைந்து வந்தனர். சேவியர் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் மேரி தலை மறைவாகிவிட்டார்.

ஆனாலும் போலீசார் அவரை தேடிவந்த நிலையில், மேரியே நாகலூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணையும் நடத்தினர்.

குடித்துவிட்டு வந்து தன்னையும், தன் மகனையும் தினமும் டார்ச்சர் செய்வதாகவும், தண்ணி அடிக்க பணம் தராவிட்டால் ஆபாசமாக பேசுவதாகவும் வாக்குமூலம் தந்தார். இதனை அடுத்து மேரியை கோவை சிறையில் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.