திருமணமாகி 2 மாதத்தில் இளம் பெண் தாய் வீட்டில் மரணம்! கட்டாய திருமணமா?

கிரைம் நியூஸ் தமிழகம்
senthamarai

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண், தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாஜி என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர். இவர் உத்திரமேரூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. ஜெயந்த் சி.பி.ஐ.எம் மாதர் சங்க தலைவியாக பணியாற்றி வருகிறார். மேலும், இவர்களது செந்தாமரை( வயது 23) என்ற மகள் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று உத்தரமேரூரில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செந்தாமரை உத்திரமேரூரில் இருக்கும் தனது தாய் வீட்டில் கழிவறைக்கு செல்லும் போது, வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக செந்தாமரையின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரகசியமாக காவல் துறையினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்துள்ளனர். மேலும், இதுபற்றிய தகவல் காவல் துறையினருக்கு கிடைக்க சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் விசாரணையை தொடங்கினர். செந்தாமரை இறந்து போனது தனது தாய் வீடு என்பதாலும், இறந்த பின் உடலை எவருக்கும் தெரியாமல் புதைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தியதில், திருமணத்துக்கு முன்னதாக செந்தாமரை வேறொரு நபரை காதலித்து வந்ததாகவும், அந்த காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதன்பின்னரே மகளை சமாதானம் செய்து, இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

கல்யாணமானதில் இருந்தே செந்தாமரை மனமுடைந்து மிகவும் சோகத்துடன் காணப்பட்டு வந்ததோடு, அவர் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவுக்கு பின்னரே செந்தாமரை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உறுதியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.