விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு; நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை!

Published:

vijayabaskar
vijayabaskar

விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு; நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் குரும்பிவயல் மற்றும் பட்டத்திக்காடு ஆகிய கிராமங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. பின்னர்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது.:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கை யினை ஏற்று அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்றைய தினம் குரும்பிவயல் மற்றும் பட்டத்திக்காடு ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பயனாக , விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி
தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகளவில் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு, அதற்கு தேவையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

கடந்த பருவத்தை விட நடப்பு பருவத்தில் நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.53 உயர்த்தப்பட்டுள்ளது விவசாயி களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் ஆய்வு செய்து புதிய நேரடி நெல்
கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

  • செய்தி: தனபால், புதுக்கோட்டை

Related articles

Recent articles

spot_img