images 96 - 2026

வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள்..

தமிழகம்

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன் மற்றும் மனநலன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் இந்த வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஒருவாரம் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல், மின்னணு பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 96 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.