18 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் எப்போது? முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 15 அரசு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெறும் என கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. புதிதாக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது.

கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டுவசதித் துறை, பனைப்பொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத்துறை ஆகிய 15 அரசு துறைகளின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், மாநில சங்கங்கள் என்ற மூன்றடுக்கு முறையில் கூட்டுறவுச் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதால் அவற்றிற்கான தேர்தல்களை ஐந்து கட்டங்களாக நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் உள்ள 18,435 தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை முதற்கட்டத்தில் நான்கு நிலைகளில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்தல் திட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் தொடர்புடைய சங்கங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்களால் முதல் நிலைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12ந்தேதி வெளியிடப்படும்.

அரசு துறைகளின் தலைவர்கள் மாநில தேர்தல் அலுவலர்களாகவும், அத்துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர், சென்னை மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவுச் சங்க தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும், சட்டபூர்வமாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம் தேவையான ஒத்துழைப்பை தந்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களையும் கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories