விநோதம்: நாய்க்குப் பிறந்தது யானைக் குட்டி?! தும்பிக்கையுடன் பிறந்ததால் நம்பிக்கை இழந்த நாய்!

Published:

dog with trunk1 - 2026

தும்பிக்கையுடன் பிறந்த நாய்க் குட்டியைக் கண்டு அதிசயிக்கின்றனர் கிராமத்து மக்கள். ஆந்திரப் பிரதேசத்தில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இந்த விநோதம் நடந்துள்ளது!

‘பாலகொண்ட’ வீதியில் செங்கல் சூளை அருகில் நாய் ஒன்று அண்மையில் குட்டி போட்டது. அந்தக் குட்டிகளில் ஒரு குட்டி விசித்திரமான முகத்துடன் பிறந்துள்ளது.

dog with trunk - 2026

அந்த நாய்க்குட்டியின் முகத்தில் மூக்குக்கு பதில் தும்பிக்கை உள்ளது. அதனால் அங்குள்ளவர்கள் நாய்க்கு யானைக்குட்டி பிறந்துவிட்டது என்று பரபரப்பாகப் பேசிக் கொண்டு சென்றார்கள்.

dog with trunk4 - 2026

இதை அடுத்து நாய்க்குப் பிறந்த யானைக்குட்டியைக் காண வேண்டும் என்ற ஆவலில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் பெருமளவில் சாரிசாரியாக வந்து செல்கிறார்கள்.

ஆனால், அந்த நாய்க்குட்டிக்கோ, படு சிரமம். நீண்ட மூக்கு இருப்பதால் பால்குடிக்கக் கூட சிரமப்படுகிறது என்றும் அதனால் தாமே பால் குடிக்கச் செய்வதாகவும் உள்ளூர் மக்கள் உருக்கமுடன் கூறுகின்றனர்.

dog with trunk3 - 2026

இதுகுறித்து விலங்கியல் மருத்துவர்கள் கூறிய போது, பிறவிக் கோளாறு காரணமாகவே நாய்க்குட்டி இது போன்ற வடிவில் பிறந்துள்ளது என்றனர். இதுபோன்று பிறக்கும் நாய்க்குட்டிகள் அதிக நாள் உயிரோடு இருக்காது என்றும் அவர்கள் வருத்ததுடன் தெரிவித்தனர் .

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!
dog with trunk2 - 2026

இந்த நாய்க்குட்டிக்கு இன்னமும் கண்கள் கூட முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதனால் சரியாக பார்க்க முடியவில்லை என்கிறார்கள். இந்த நாய்க்குட்டி குறித்த படங்களும் வீடியோவும் சமூகத் தளங்களில் ஆச்சரிய கரமானதாகவும் அதிசயமானதாகவும் கூறி பகிரப் பட்டு வருகின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img