காந்தி மட்டுமா கொல்லப்பட்டார்?

உரத்த சிந்தனை துணுக்குகள்
indira gandhi rahul
indira gandhi rahul

காந்தி மட்டுமா கொல்லப்பட்டார்

  • சக்திவேல் குமார்

லால்பஹதூர் சாஸ்திரியின் மரணம் அவர் ரஷ்யா செல்வதற்கு முன்பே இந்தியாவில் திட்டமிடப்பட்ட தாக தெரிகிறது .

எப்பாடு பட்டாலாவது லால் பஹதூர் சாஸ்திரி பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் போர் சமாதான ஒப்பந்தம் செய்யவேண்டுமென்று இந்தியாவில் சிலர் விரும்பினார்கள்.

நேருவின் புதல்வி இந்திரா காந்தி பிரதமராவதற்கு ஒரே தடைக்கல்லாக லால்பஹதூர் சாஸ்திரி இருந்தார் என்று கூறப்படுகிறது.

லால் பஹதூர் சாஸ்திரி ரஷ்யா பயணம் செல்லும் முன் அவர் எழுதியதாக ஒரு கடிதம் ,தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை சிலாகித்து அன்றைய பம்பாய் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பப்பட்டது.

பின்னால் அது லால்பஹதூர் சாஸ்திரி அவர்களால் எழுதப்படவில்லை என்று தெரியவந்தது.

இந்திய பிரதமர் அலுவலகம் லால் பஹதூர் சாஸ்திரியின் மரணத்திற்கு பின்னர் ஏனோ அதை தொடர்ந்து விசாரிக்கவில்லை .

ரஷ்யாவில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகி முடிந்தபின், இரவு 10:20க்கு லால்பஹதூர் சாஸ்திரி “யாருடனோ” தொலைபேசியில் பேசினார்.

அன்று இரவு தன் மனைவியுடனும் லால்பஹதூர் தொலைபேசியில் பேச விரும்பினார் . ஏனோ அவருக்கு தொடர்பு கிடைக்கவில்லை.

சாஸ்திரி வழக்கம்போல் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒரு தம்ளர் பால் அருந்தினார் . பால் கொண்டு வந்து கொடுத்தது அவரது சமையல்காரன் முகமது ஜேன்.

பால் அருந்தி படுத்தவர் 12 மணிக்கு இரவு உடையுடன் வந்து அவரது மருத்துவரை அழைத்தார் .

மருத்துவரிடம் அறையிலிருந்த பிளாஸ்க்கை காட்டினார் .அதிலிருந்து தண்ணீரை கொடுத்ததற்கு அருந்த மறுத்தார் .

லால்பஹதூர் சாஸ்திரி ரஷ்ய நாட்டின் தாஷ்கெண்ட் நகரில் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து போனார்.

லால்பஹதூர் சாஸ்திரியின் உடலை ரஷ்ய மருத்துவர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்ய முயன்றார்கள். இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் அதை அனுமதிக்கவில்லை .

அவருக்கு பால் கொடுத்த சமையல்காரர் முகமது ஜென் மற்றும் உதவியாளர்களை கைது செய்து விசாரித்த ரஷ்ய புலனாய்வு அமைப்பான KGB பின் .. திடீரென கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவித்து விட்டது.

நேருவின் குடும்ப நண்பரும் காஷ்மீரை சேந்தவருமான ரஷ்யா இந்திய தூதர் கவுலின் கட்டளைப்படியே இந்த கைதானவர்களின் விடுதலை நடந்தாக கூறப்படுகின்றது.

1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய – பாக்கிஸ்தான் போரில் சரியான அடிவாங்கிய பாக்கிஸ்தானுக்கு , போர் நிறுத்தம் தவிர வேறு சில நிபந்தனைகளையும் விதிக்க லால்பஹதூர் சாஸ்திரி முடிவு செய்திருந்ததாகவும், சாஸ்திரியின் இந்த முடிவுகள் மறைமுக கரங்களால் தடுக்கப்பட்டகாகவும் கூறப்படுகின்றது.

லால்பஹதூர் சாஸ்திரியின் இறந்த உடலைப்பார்த்த அவர் மனைவி அது நீலநிறமாக இருந்ததையும் முகத்தில் ஏராளமான புள்ளிகளுடன் இருந்ததையும் கூறி கதறினார் .

லால்பஹதூர் சாஸ்திரியின் மகன்களும் அதேயே சொல்ல , இந்திய வெளியுறவு அதிகாரிகளில் ஒருவர் எங்கிருந்தோ வந்து உடனடியாக சாஸ்திரியின் முகத்தில் சந்தனம் பூசி தடயங்களை மறைத்தார் .

இந்திய மருத்துவர் அஜய் குமார் அவரது உடல் vegetable poison கொடுக்கப்பட்டது போல உள்ளதாக சொன்னார் . சாஸ்திரியின் உடலில் சில வெட்டு காயங்களையும் கண்டதாக சொன்னார் .

உடலில் சில இடங்களில் தேவை இல்லாத துளைகள் இருந்தாகவும் சொன்னார். அவரது உடல் பிற்பாடு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு உண்மைகளை கண்டு பிடிக்கலாமலிருக்க அவரது உடலிலிருந்து முழு இரத்தமும் குறிப்பாக தண்டு வட திரவமும் வெளியேற்றப்பட்டிக்கலாம் என்றும் அதற்கான துளை அவரது பின் கழுத்திலிருந்தாக அந்த மருத்துவர் அபிப்பிராயப்பட்டார்.

காவல்துறையில் அவரது குடும்பத்தாரால் லால்பஹதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் பற்றி புலனாய்வு செய்ய புகார் கொடுக்கப்பட்டபோதும் அது பற்றி எதுவும் காவல்துறையால் கண்டு கொள்ளப்படவில்லை.

காங்கிரஸ் தலைவர் ஒருவரின் புகார்

பிற்காலத்தில் அவர் மனைவி லலிதா சாஸ்திரியின் சந்தேகங்கள் புலம்பல்கள்…அட்டலும், ராஜ்நாராயணனும் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள் என்று எதுவுமே எடுபடவில்லை .

சினிமாவை போல சாஸ்திரியின் மரணத்தை சந்தேகித்தவர்கள் அவர் அருகே இருந்தவர்கள் அனைவரும் அசம்பாவிதங்களில் கொல்லப் பட்டார்கள்.

மொத்தத்தில் ஏழை சொல் அம்பலமாகாது போல எதுவுமே எடுபடவில்லை

அப்புறம்… முக்கியமான ஒன்று

சாஸ்திரியின் உடல் இந்தியாவிற்கு வந்தபோது ..உடலை சூழ்ந்து இருந்தவர்களின் கூட்டுப்படங்கள் சில பிரசுரமாகின .

அவற்றில் அதிசயமாக இந்திராகாந்தி மற்றும் அவருக்குக் நெருக்கமானவர்கள் அத்தனை பேரின் முகத்திலும் சொல்லி வைத்த மாதிரி புன்னகை மிளிர்ந்த படத்துடன் ஒரு writeup வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் செய்தி வெளிவந்ததாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.