எம்ஜிஆர் பிறந்த நாளில் சில நினைவலைகள்!

துணுக்குகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
mgr jeyalalitha adimaipen - 2026

1967-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். துப்பாக்கி யால் சுடப்படுவதற்கு முன் அங்கு பிரச்சாரத்துக்கு சென்றிருந்தார். எம்.ஜி.ஆரை பார்த்த ஒரு மூதாட்டி அன்புடன் அவருக்கு சோடா வாங்கிக் கொடுத்தார்.

அவரை எம்.ஜி.ஆர். நெகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்ட அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலம். தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் அந்தப் படம் முக்கிய இடம் பிடித்தது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம் பெற்ற ‘பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?…’ பாடல் காட்சி மதுரை வைகை அணையில் படமாக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் எம்.ஜி.ஆரை பார்க்கத் திரண்டனர். மக்கள் தாகத்தில் தவிக்கக் கூடாது என்று 2 லாரிகளில் தண்ணீரும் மோரும் கொண்டு வரச் சொல்லி திரண்டிருந்த மக்களுக்கு கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

பயங்கர கூட்டம், எந்தப் பக்கம் திரும் பினாலும் மக்கள் தலைகள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கே வந்துவிட்டார். அவரிடம் பரிவோடு பேசிய எம்.ஜி.ஆர்., அவரது குடும்பம் குறித்து விசாரித்தார்.

‘‘உங்களுக்கு பிள்ளைகள் இருக் காங்களாம்மா?’’

‘‘இருக்காங்கப்பா’’ என்று பதிலளித்த மூதாட்டியிடம், ‘‘என்ன பண்றாங்க?’’ என்று அடுத்த கேள்வியை கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘ஒரு புள்ள பட்டாளத்துல இருக்கு. இன்னொரு புள்ள சினிமாவுல இருக்கு’’

மூதாட்டியின் இந்த பதிலால் எம்.ஜி.ஆருக்கு வியப்பு. சினிமாவில் இருக்கிறார் என்றால் நிச்சயம் தனக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணியபடியே கேட்டார்… ‘‘சினிமாவில் இருக்கும் பிள்ளையின் பெயர் என்ன?’’

‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’

பதிலளித்த அந்தத் தாயின் கண்கள் மட்டுமல்ல; அவரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆரின் கண்களும் பனித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.