சீனாவை விஞ்சியது இந்தியா! கைகொடுத்தது நம்ம சென்னை..!

Published:

29 May16 ICF - 2026

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மிகச் சிறப்பாக ரயில்வே கோச்சுகளை உற்பத்தி செய்திருக்கிறது இந்தியா என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ட்விட்டர் தளத்தில்!

விவேக் அக்னிஹோத்ரி என்பவர் வெளியிட்ட பதிவில் இந்தியா சீனாவை மிஞ்சி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்! உலகத்தில் மிகப்பெரிய ரயில் பெட்டி உற்பத்தியாளர்கள் சீனா தான் என்று இருந்தது இப்போது இந்தியாவுக்கு மாறி இருக்கிறது!

சீனாவை காட்டிலும் இந்தியா அதிக அளவில் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறது! சென்னையிலுள்ள ஐசிஎஃப் – ரயில் பெட்டித் தொழிற்சாலை, இந்த வருடம் 2919 ரயில் பெட்டிகளைத் தயாரித்து இருக்கிறது. அதுவே ஒரு வருடத்தில் சீனா தயாரித்துள்ள 2600 ரயில் பெட்டிகள் என்ற அளவை காட்டிலும் அதிகம் தான்

இப்போது இந்தியா தனது மேக் இன் இந்தியா திட்டத்திற்காக பெருமைப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தார்!

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img