வெறுப்பு உணர்வூட்டும் வீடியோக்களை அகற்றுகிறது யுடியூப்: சுந்தர் பிச்சை!

உலகம் துணுக்குகள் தொழில்நுட்பம்

sundar pichai 660 110918013407 - 2026

வெறுப்புணர்வு பதிவுகளை யுடியூப் நீக்கி வருவதாக, சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.

வெறுப்புணர்வை தூண்டும் விதமான ஆபத்தான பதிவுகளை யூ டியூப்பிலிருந்து நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் பேசிய அவர் கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 லட்சம் வீடியோ பதிவுகள் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு வீடியோக்களை பார்த்துப் பிரித்து, மனிதர்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இப்பணி நடந்து வருவதாகவும் சுந்தர் பிச்சை கூறினார்.

சமூக தளங்களில் ஒன்றான யூ டியூப்பில் மதம், மொழி, இனம், நாடு உள்ளிட்ட பிரிவுகளில் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் அதிகளவில் இடம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அத்தகைய பதிவுகளை நீக்க, கூகுளின் துணை நிறுவனமான யூ டியூப் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.