நெல்லையில் 120 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில்… விஎச்பி அமைப்பு புகார்!

நெல்லை புகார் பெட்டி வீடியோ

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் கிராமம் பகுதியில் புகழ்பெற்றது, அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோவில்!

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இக்கோவிலுக்கு 120 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை சமூக விரோதிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.

கோவில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம். தங்களின் பெயருக்கு மாற்ற பட்டா தயார் செய்யும் வேலைகளில் சிலர் இறங்கியுள்ளனர்.

கோவில் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் அறநிலையத்துறையால் முறையாக பராமரிக்கப்படாததே இதற்கு காரணம் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனை அறிந்த விஸ்வ ஹிந்து பரிஷத் சமூக விரோத கும்பலுக்கு எதிராக தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளது.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகார் குறித்து நெல்லை பொறுப்பாளர் ஆறுமுகக்கனி செய்தியாளர்களிடம் கூறியவை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.