தனியார் பஸ்களை விட அரசு பஸ்ஸில் வசதிகள் பெஸ்ட் ரகம்: அமைச்சர் கே.சி.வீரமணி

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம் வீடியோ

தனியார் பஸ்களை விட அரசு பஸ்கள் வசதிகள் அளிப்பதில் டாப் என்று வேலூர் மாவட்டத்தில், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் 20 புதிய பேருந்துகளை துவக்கிய பின் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி அளித்தார். அப்போது அவர், டீசல் விலையேற்றத்தால் இதுவரை போக்குவரத்து துறைக்கு எதுவும் பாதிப்பு இல்லை. டீசல் விலையை குறைப்பதற்கான முயற்ச்சியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலும் கூட மக்கள் எந்த வித சலிப்பும் இன்றி தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இயக்கப்படும் புதிய பேருந்துகளால் மக்களிடம் பெறும் வரவேற்பு உள்ளது. தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் உள்ளது. இனி வரும் காலங்களிலும் புதிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.

ஏற்கெனவே இயக்கப்பட்ட புதிய பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் எங்களது பார்வைக்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் தீர்க்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.