கீழடியில் 5 ஆம் கட்ட ஆய்வுக்கு அனுமதி கேட்டுள்ளோம்: மாஃபா பாண்டியராஜன்

நெல்லை வீடியோ

நெல்லை மாவட்டம் சுரண்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா, மருத்துவ முகாம் உள்ளிட்ட முப்பெரும் விழாவில், தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கீழடியில் 3 கட்ட ஆய்வுகளில் 2 ஆய்வுகளில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்தன. 3 வது ஆய்வில் எதுவும் கிடைக்க வில்லை. 4 வது கட்ட ஆய்வில் 13,800 பொருட்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து 5வது கட்ட ஆய்வுக்கு அனுமதி கேட்டுள்ளோம்.

மதுரையில் நடைபெறும் பழங்கால பன்னாட்டு தமிழர் கண்காட்சியில் கீழடியில் கிடைக்கப் பெற்றுள்ள அரிய வகை பொருட்கள் இடம்பெறச் செய்யவுள்ளோம். அதன்பின் 4 இடங்களில் அருங்காட்சியகம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கபபட உள்ளன.

8 கோடி ரூபாய் செலவில் தேனி, திருவண்ணாமலை பகுதிகளில் 2 அருங்காட்சியகம் தொடங்கப்பட உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அவருடன் சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன் தாஸ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.