திருவெம்பாவை – பனுவல் 7 (பாடல்)

வீடியோ

”அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்” என்று தொடங்கும் திருவெம்பாவையின் ஏழாம் பாடலை நாம் இன்று காண இருக்கிறோம்.

”தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம் எம் பெருமானை அவன் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே “சிவ சிவ” என்று சொல்லுவாய். தென்னாடுடைய சிவனே என்று சொல்லும்போதே தீயிலிட்ட மெழுகு போல உருகுவாயே இன்று இன்னும் ஏன் உறங்குகிறாய் எழுந்துவா அந்த சிவ பரம்பொருளை நாம் தொழவேண்டாமா” என்று தோழிகள் இன்னொரு தோழியை எழுப்புகின்றனர்.

இந்த பாடல் வழியாக சோதி வடிவான அந்த ஈசனை குறித்து உருகி வழிபட வேண்டும் என்று பக்தி மார்கத்தை மாணிக்கவாசகர் நமக்கு போதிக்கிறார்.

வாருங்கள் நாமும் ஈசனை தொழுது அவன் அருள் பெறுவோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.