கோவையில் நடைபெறும் உணவுத் திருவிழா!

Published:

கோவையில் மாபெரும் உணவுத் தெருவிழா ஈட்ஸ்ட்ரீட் என்ற உணவுத் திருவிழாவாக, இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகின்றது..

கோவை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஒட்டல்கள் சங்கம் சார்பில் நடத்தப் படும் ” சாப்பிட ஒரு தெரு’ ( ஈட்ஸ்ட்ரீட்) திருவிழா இன்று நடந்தது. மேலும் அறுசுவை உணவு தயாரிப்பாளர்கள் இந்த மெகா உணவு தெரு விழாவை நடத்துகின்றன.

அன்னபூர்ணா, ஆனந்தாஸ், ஹரிபவனம், ஆர் எச் ஆர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் இதில் பங்கேற்கின்றன.

இந்த உணவுத் திருவிழாவை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்ஷரன் மற்றும் கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய்கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்! மேலும் உணவு அரங்குகளை பார்வையிட்டனர்

இந்த உணவுத் திருவிழாவில் சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ,பறை ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும்.
மேலும் உணவுத் திருவிழாவில் சாம்பார் இட்லி முதல் மட்டன் சுக்கா வரை, பிட்சா முதல் பிரியாணி வரை மற்றும் மில்க் ஷேக் முதல் ஜஸ்க்ரீம் வரை அனைத்தையும் ருசிக்கலாம்

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

கிராமத்துத் திருவிழாவில் உள்ள கிளி ஜோசியம், பெட்டிக்கடை உள்ளிட்டவைகளை ஷாப்பிங் செய்யலாம் மேலும் 140 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.

இவை குறித்து கோவை ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியவை…

Related articles

Recent articles

spot_img