திருவாரூரிலும் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம்? தயாராகும் தினகரன்! தப்ளித்தனம் செய்ய மாட்டாராம்!

அடடே... அப்படியா? திருச்சி வீடியோ

திருவாரூர் இடைத்தேர்தலில் தப்ளித்தனம் செய்யமாட்டோம் எனவும் தனி பார்முலா வைத்துள்ளதாகவும் அதன் மூலம் பணம் கொடுப்பவர்களை மூக்காடிட்டு ஓடச் செய்வோம் என டிடிவி தினரகன் தஞ்சையில் தெரிவித்து உள்ளார்.

அமமுகவின் துணை பொதுச் செயலாளரான ஆர்.கே.நகர் சட்;டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் அங்கு போட்டியிட்டபோது 20 ரூபாய் டோக்கன் கொடுத்தாக புகார் எழுந்து இன்றுவரை அது தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலுக்கு அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் நேற்று அறிவிக்கப் பட்டார். இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் கட்சி அலுவலகததை திறந்து வைத்து அளித்த பேட்டியில் ஆர்.கே.நகரில் அதிமுக தான் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டது: திமுக பணப் பட்டுவாடாவில் ஈடுபடவில்லை, அரசியலுக்காக திமுக வேண்டுமானால் பொய் சொல்வார்கள் தான் சப்ளித்தனம் செய்ய மாட்டேன் என்று கூறினார்.

திருவாரூர் இடைத்தேர்தலில் பணப்படுவாடாவை தேர்தலை ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும்! 303 வாக்குச் சாவடிகளிலும் தனி பார்முலா வைத்து உள்ளதாகவும் பணம் கொடுப்பவர்கள் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வார்கள் அதை போட்டோ எடுத்து ம்மீடியாக்களில் கொடுத்தால், அவர்கள் முக்காடு போட்டுக்கொண்டு ஓடுவார்கள் என்றார்

மேலும், திருவாரூர் இடைத்தேர்தல் இப்போது வேண்டாம் என கூறும் கட்சிகள் தேர்தலை கண்டு பயப்படுகிறது!

அ.ம.மு.க தான் உண்மையான மக்கள் இயக்கம் என்பதை நிரூபித்துக்காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார் டிடிவி தினகரன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.