சேலம் ஜலகண்டாபுரம் அம்மன் கோயிலில் கத்தி போடும் விழா! எடப்பாடியார் பங்கேற்பு!

Published:

edappadiyar salem - 2026

சேலம் : சேலம் அருகே ஜலகண்டாபுத்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் …..

சேலம் அருகே ஜலகண்டாபுத்தில் புகழ் பெற்ற ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட மக்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஜகஜாத்ரே தொட்டப்பா எனும் பெருவிழா நேற்று கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் விமரிசையாக தொடங்கியது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற மஹா சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான வீரக்குமாரர்கள் கலந்து கொண்டு கத்தி போட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

உடன் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக பிரமுகர்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related articles

Recent articles

spot_img