தண்ணீருக்குள் காதலை சொன்னதால்.. கண்ணீரை சுமந்த காதல்!

உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
lover surprise 1 - 2026

ஓர் அமெரிக்க இளைஞர் தான்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் தன் தோழி கெனிஷாவுடன் தான்சானியா பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கி இருந்தார். தன்னை திருமணம் செய்து விருப்பமா? என்பதைக் வித்தியாசமாக காதலிக்கு சர்பரைஸ் குடுக்க முடிவு செய்த அவர் தண்ணீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்துள்ளார்.

lover surprise - 2026

தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் தண்ணீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்து காட்டியுள்ளார் அந்த சமயத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

தன் வாழ்வில் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக கெனிஷா ஃபேஸ்புக் பதிவொன்றில் கூறி உள்ளார்.

அவர்கள் தங்கி இருந்த மாண்டா விடுதி நிர்வாகம், “நாங்கள் கவலையின் விளிம்பிற்கே சென்றுவிட்டோம்” என்று கூறி உள்ளது.

நான்கு இரவுகளுக்கு அந்த விடுதியை வெபர் முன்பதிவு செய்திருக்கிறார். மூன்றாவது இரவு இந்த விபத்து நடந்துள்ளது. ஓர் இரவுக்கான கட்டணம் 1700 அமெரிக்க டாலர்கள். இந்த விடுதியானது தண்ணீருக்கடியில் 32 அடி ஆழத்தில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.