சுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!

உலகம் லைஃப் ஸ்டைல்
whale - 2026

சுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தாக மாறிய ஒரு சுறா மீனுக்கு பின்னர், அதிகாரிகள் முடிவு கட்டினர்!

மடகாஸ்கருக்கு 500 மைல் தொலைவில் உள்ள ரீயூனியன் தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். ஆனால் அங்கு கடற்கரைகளில் சுறா மீன்கள் சுற்றி வருவதால் பயணிகள் நீச்சலடிக்க செல்ல தயங்கினார்கள்.

இதனால் அதிகாரிகள் மனிதர்களைத் தாக்கும் அபாயகரமான அந்த சுறா மீனைக் கொன்றார்கள். இன்னும் ஐந்து சுறா மீன்களைக் கூட தாம் தீவில் பார்த்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.

அது அப்படி இருக்க… இறந்த சுறா மீனின் உடலை அறுத்த போது சுறா மீனின் வயிற்றில் ஒரு மனிதக் கையைக் கண்டார்கள். மோதிரம் அணிந்திருந்த அந்தக் கையைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

சென்ற சனிக்கிழமை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பீச்சில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதால் இந்த கை அவருடையதாக இருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர்.

கை விரலில் இருந்த மோதிரம் தன் கணவருடையதே என்று காணாமல் போனவரின் மனைவி கூறியதால் காணாமல் போன மனிதர் இறந்ததாக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மரணித்தவர் தன் மனைவியுடன் பீச்சுக்கு வந்திருந்தார் என்றும் சனிக்கிழமை மதியம் நீரில் இறங்கியவரை பின்னர் காணவில்லை என்றும் மனைவி புகார் அளிக்கவே அதிகாரிகள் கடற்கரை முழுவதும் தேடியும் பலனில்லாமல் போனது.

தற்போது சுறா மீனின் வயிற்றில் கை கிடைத்துள்ளதால் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக முடிவு கட்டினர். ஆனால் சுறா மீன் அவரைக் கொன்றதா அல்லது அவர் நீரில் மூழ்கி இறந்த பின் சுறாமீன் தின்றதா என்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பின் தான் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.