இலங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் மீது தாக்குதல்!

Published:

srilanka election - 2026

இலங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தாக்குதல்

இன்று (18) இலங்கை சோசலிச குடியரசின் 07 வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி உள்ள கோத்தாபய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

இந் நிலையில் இவருடன் எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாக அவர்களுக்கு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் ஒன்று இலங்கையில் கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தேயிலை தோட்டத்தில் நடந்துள்ளது.

இதனால் பலர் சொத்துக்களை இழந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்..

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெருபான்மை மக்களாகிய சிங்கள மக்களின் வாக்குகளிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு கோத்தாபய ராஜபக்ச அவர்கள் வெற்றியீட்டினார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

சிறுபான்மை மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாக அவர்களுக்கு வாக்களித்தனர். காரணம் கோத்தாபய ராஜபக்ச அவர்கள் மீது சிறுபான்மை மக்கள் கொண்டுள்ள வெறுப்பு.

இந் நிலையில் தாங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை என்பதினால் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடாத்தி உள்ளனர். இதனால் இலங்கையில் இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள அச்சத்தில் உள்ளனர்.

img 20191119 wa00123765985051487079572 - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img