திருப்பதி பெருமாள்  தரிசனத்துக்கு… ஐஆர்சிடிசி தரும் இன்ப அதிர்ச்சி!

இந்தியா சற்றுமுன் சுற்றுலா லைஃப் ஸ்டைல்
tirupathi therottam - 2026

திருமலை ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது ஐஆர்சிடிசி. விமானத்தில் திருப்பதி டூர் அறிவித்துள்ளது ஐஆர்சிடிசி.

ஐஆர்சிடிசி திருப்பதி பாலாஜி பிரத்யேக பிரவேச தரிசனம்.

இந்த பேக்கேஜில் விமான டிக்கெட், ஒரு இரவு ஏசி ஹோட்டல் அறையில் அகாமடேஷன், ஒரு பிரேக்ஃபாஸ்ட், 2 லஞ்ச், 1 டின்னர், ஏசி பஸ்ஸில் சுற்றி பார்த்தல், திருமலை, திருச்சானூர், ஸ்ரீ காலஹஸ்தி, காணிப்பாக்கம், சீனிவாசமங்காபுரம் சிறப்பு தரிசனம், டிராவல் இன்ஷூரன்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன.

திருமலை திருப்பதிக்கு ஐஆர்சிடிசி மேலும் ஒரு சிறப்பான டூர் பேக்கேஜ் அறிவித்துள்ளது. இதற்கு முன் ரயில் வழியே திருமலைக்கு பேக்கேஜ் அறிவித்தது ஐஆர்சிடிசி . இப்போது விமானத்தில் பக்தர்களை திருப்பதிக்கு அழைத்துச் செல்கிறது.

திருப்பதி பாலாஜி பிரத்யேக பிரவேச தரிசனம் என்ற பெயரில் இந்த பேக்கேஜை அளிக்கிறது. ஹைதராபாத்தில் இருந்து இந்த டூர் தொடங்குகிறது.

நவம்பர் 15, 22, 29, டிசம்பர் 6, 27 தேதிகளில் இந்த சிறப்பு டூர் பேக்கேஜ் அமலுக்கு வருகிறது.

பக்தர்கள் ஐஆர்சிடிசி டூரிசத்திற்கு தொடர்புடைய அதிகார வெப்சைட்டை திறந்து அதில் புக் செய்து கொள்ளலாம்.

3 பேர் தங்கும் வசதியுள்ள ஓர் அறையுடன் கூடிய பேக்கேஜ் ரூ. 10,970, இரண்டு பேர் தங்கும் வசதியுடன் கூடிய அறையுடன் கூடிய பேக்கேஜ் ரூ.11,780 ரூபாய். இரு நாட்கள் ஒரு இரவு டூர் பேக்கேஜ் இது.

முதல் நாள் காலை 6.45 மணிக்கு ஹைதராபாத்தில் விமானம் ஏறி 8 மணிக்கு திருப்பதி. அங்கிருந்து ஹோட்டல். பின் காணிப்பாக்கம், சீனிவாசமங்காபுரம்.

மதியம் உணவுக்கு பின் ஸ்ரீ காலஹஸ்தி. மாலை ஹோட்டலுக்கு திரும்பி வந்து இரவு உணவு, தூக்கம்.

இரண்டாம் நாள் காலை திருமலைக்கு அழைத்துச் செல்வர். பிரத்யேக பிரவேச தரிசனம். மதியம் உணவுக்கு பின் திருச்சானூர். இரவு எட்டரைக்கு திருப்பதியில் விமானம் ஏறி 9 40க்கு ஹைதராபாத்.

இதுதான் ஐஆர்சிடிசி அறிவித்துள்ள பயணத்திட்டம் இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதுபோல் சென்னை மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் திருப்பதி பிரத்யேக பிரவேச திட்டத்தை ஐஆர்சிடிசி தொடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

முழு தகவலுக்கு… https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SHA01

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.