பொருளாதாரத்தில் 300 லட்சம் கோடி நஷ்டம்! WHO அறிவிப்பு!

உலகம் சற்றுமுன்
who - 2026

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் ஒரு சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஒரு சில நாடுகளில் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் ஏராளம்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்ட நிலையில் உலக பொருளாதாரத்தில் 300 லட்சம் கோடிக்கு இழப்பை ஏற்படுத்தும் என ஐநா தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் 180 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வளரும் நாடுகள் சுற்றுலா துறையை நம்பி உள்ளதால் இதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.