எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் முன்பு 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் 3-வது நீதிபதி சத்தியநாராயணன் விசாரணை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய வாதத்தின் போது, முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தபோது, அ.தி.மு.க.வின் பெயர், சின்னம் முடக்கப்பட்டிருந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என தகுதி நீக்கம் செய்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2வது நாளாக தொடர்கிறது எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை
Popular Categories



